Categories
தேசிய செய்திகள்

காதலி மர்ம மரணம்…. கரும்பு தோட்டத்தில் காதலன்…. கொலையின் பின்னணி என்ன…? அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பஸ்டி மாவட்டம் ரவுட்ஹலி என்னும் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் சவுத்ரி என்பவர் நேற்று காலை அவரது கரும்பு தோட்டத்திற்கு சென்றிருக்கின்றார். அப்போது கரும்பு தோட்டத்தில் இளைஞன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றார். உடனடியாக இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான அங்கித் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்கித்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கீத் அதே கிராமத்தை சேர்ந்த முஜிபுல்லா என்பவரின் வீட்டில் டிராக்டர் வாகனம் ஓட்டி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

முஜிபுல்லாவின் விவசாய நிலத்தில் டிராக்டர் வாகனத்தை இயக்கும் டிரைவராக வேலை செய்து வந்திருக்கின்றார். முஜிபுல்லாவுக்கு இர்ஃபான், இர்ஷத் என இரு மகன்களும் அமீனா என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முஜிபுல்லாவின் மனைவி அங்கித்திற்கு போன் செய்து வேலைக்கு அழைத்ததாகவும் அதன் பின் வீடு திரும்பவில்லை எனவும் அங்கித்தின்  தந்தை கூறியுள்ளார்.  மேலும் அங்கீத்தின் போன் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும்  தந்தை கூறியுள்ளார். இதனை அடுத்து போலீஸர் முஜிபுல்லாவின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அமீனாவிடம் தரணி நடத்துவதற்காக அவரை கூப்பிடுமாறு போலீசார் கேட்டிருக்கின்றன. ஆனால் அமீனா நேற்று முன்தினம் இறந்துவிட்டதாக அவரது உடல் அடக்கம் செய்து விட்டதாகவும் அமீனாவின் சகோதரர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் விசாரணையில் முஜிபுல்லா வீட்டில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்த அங்கீகத்தும் அமினாவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு ஆமினாவின் குடும்பத்தினரை எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் எதிர்ப்பையும் மீறி அமினாவும் அங்கித்தும் காதலித்து வந்தால் இளம் பெண்ணின் பெற்றோர் சகோதரர்கள் இருவரையும் ஆவண கொலை செய்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவரையும் ஆவண கொலை செய்துவிட்டு அமினாவின் உடலை ஊருக்கு வெளியே புதைத்து விட்டு அங்கித்தின் உடலை கரும்பு தோட்டத்தில் வீசி இருக்கலாம் என போலீசார் கூறியிருக்கின்றனர். இதனை தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறி புதைக்கப்பட்ட அமினாவின் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். மேலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் அந்தப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலை வருகின்றது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

Categories

Tech |