ஹைதராபாத்தில் பெண் ஒருவர் மெட்ரோ ரயில் ஸ்டேஷனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஏறி செல்லும் மாடி படிக்கட்டு கட்டிடத்தில் நின்றுகொண்டிருந்தார். இதைப் பார்த்த சிலர் குதிக்க வேண்டாம் வேண்டாம் என்று கத்தி கூச்சலிட்டனர். இருப்பினும் அந்தப் பெண் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் மனதை பதைபதைக்க வைத்தது.
https://twitter.com/aamerarfath/status/1511488769093820416
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பெண்ணின் காதலுக்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது போன்ற எண்ணங்கள் ஏற்படாமல் மாநில உதவி மையம் 104 ஐ அழைக்கவும்.