Categories
மாநில செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு” காதலன் செய்த செயல்…. இளம் ஜோடி எடுத்த முடிவு…!!

காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . 

மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது அம்பர்நாத் ரயில் நிலையம். நேற்று முன்தினம் ரயில் மோதி ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள்   கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரயில் மோதி இறந்தவர்கள் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்த யோகேஷ்(30) மற்றும் ப்ரீத்தி (22) என்பது தெரியவந்துள்ளது.

இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இவர்களது காதல் திருமணத்தை  இரு குடும்பத்தினரும் எதிர்த்துள்ளனர் . இதனால் மனவேதனை அடைந்த யோகேஷும் ப்ரீத்தியும் தற்கொலை செய்ய முடிவு எடுத்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பாக யோகேஷ் தனது புகைப்படத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.  பின்னர் பிரீத்தி உடன் சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Categories

Tech |