Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…. கொடூரமாக கொன்ற மகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மகன் தாயை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி வடக்கு தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமாரின் காதலுக்கு அவரது தாய் பஞ்சவர்ணம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சதீஷ்குமார் தனது தாயை அரிவாளால் வெட்டியதோடு, அவர் மீது தென்னை மட்டைகளை போட்டு தீ வைத்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த பஞ்சவர்ணத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பஞ்சவர்ணம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |