காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபின் ஸ்டான்லி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபின் ஸ்டான்லி ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிரபின் ஸ்டாலின் வீட்டில்யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபின் ஸ்டான்லியின் தாயார் கதறி அழுதுள்ளார். இவருடைய அழுகுரல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.
அதன்பிறகு பிரபின் ஸ்டான்லியை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பிரபின் ஸ்டான்லியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து கருங்கல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரபின் ஸ்டான்லியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.