தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரப்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சுந்தர்ராஜ்(28) என்ற மகன் உள்ளார். இவரும் 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2020-ஆம் ஆண்டு சுந்தர்ராஜ் மாணவியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து விடுதியில் வைத்து சுந்தர்ராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சுந்தர்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சுந்தர்ராஜுக்கு 3000 ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக நலத்துறையின் கீழே உள்ள நிலையில் இருந்து 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.