Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. இன்ஜினியரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இன்ஜினியரான ராஜ்குமார் ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ராஜ்குமாரும், ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான பிரியதர்ஷினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரியதர்ஷினியை ராஜ்குமாருடன் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |