காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூரிலுள்ள மதனப்பள்ளி அடுத்த சீக்கலபைலு பகுதியை சேர்ந்தவர் அமர் (வயது 22). ஆட்டோ டிரைவரான இவர் வலசப்பள்ளி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிரவந்தி (21) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரத்தைப் பற்றி அறிந்த இரு குடும்பத்தினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இருவீட்டாரும் தங்களை பிரித்து விடுவார்கள் எனக்கருதினர்.
இதனால் மனமுடைந்த காதல் ஜோடி கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள ஒரு தனியார் நிறுவனம் அருகில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதியினர் மீட்டு மனதப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.