பாகிஸ்தான் நாட்டில் கிஷ்வர் சாகிபா என்ற பெண்மணி வசித்து வருகிறாள். இவர் திபால்பூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் ஷசாத் என்பவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மீது கிஷ்வர் சாகிபாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. எனவே கிஷ்வர் தன்னுடைய காதலை ஷசாத்திடம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷசாத் சில காலம் மருத்துவ மனைக்கு செல்லாமல் இருந்துள்ளார். ஏனெனில் கிஷ்வர் தன்னுடைய காதலை ஷசாத்திடம் கூறியவுடன் அவருக்கு அதிர்ச்சியில் காய்ச்சல் வந்து விட்டதாம்.
அதன்பின் சிறிது நாட்கள் கழித்து 2 பேரும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசி திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கிஷ்வர் மற்றும் சஷாத் ஆகியோருக்கு தற்போது திருமணம் முடிந்த நிலையில், 2 பேரும் மருத்துவமனையை விட்டு வெளியேறி சொந்தமாக ஒரு கிளினிக் அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். அதோடு கிஷ்வர் மற்றும் சஷாத் ஆகியோர் ஒரு youtube சேனலை தொடங்கி அதில் தங்கள் அன்றாட வாழ்க்கையை பற்றி பல முக்கிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் மருத்துவராக பணிபுரியும் ஒரு பெண்மணி துப்புரவு தொழிலாளி ஒருவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.