Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

காதலும், நகைச்சுவையும் கலந்த கலவை…. பிரின்ஸ் படத்தின் திரைவிமர்சனம்…. இதோ உங்களுக்காக!!!!

காதல் மற்றும் நகைச்சுவை கலந்து அலட்டிக்கொள்ளாத திரைக்கதையாக பிரின்ஸ் படம் உருவாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் குடும்பம் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட பாரம்பரியம் உடையது. படத்தில் அப்பா சத்யராஜ். மகன் சிவகார்த்திகேயன் ஆவார். இவர் ஒரு பள்ளியில் சமூக அறிவியல் பாடமெடுக்கும் ஆசிரியராக இருக்கிறார். அதே பள்ளியில் ஆங்கிலம் பாடமெடுக்கும் டீச்சர், மரியா ரியா போசப்கா.

அத்துடன் சென்னையில் பிறந்த இங்கிலாந்து நாட்டு பெண். இதில் சிவகார்த்திகேயனுக்கும், மரியாவுக்கும் இடையில்  காதல் மலர்கிறது. மரியா இங்கிலாந்து பெண் என்ற ஒரேகாரணத்துக்காக மகனின் காதல் மற்றும் கல்யாணத்துக்கு சத்யராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அப்பாவையும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றவர்களையும் எவ்வாறு சமாதானப்படுத்தி சிவகார்த்திகேயன் காதலி மரியாவை கைப்பிடிக்கிறார் என்பது மீதிகதை ஆகும்.

காதலும், நகைச்சுவையும் கலந்தவேடம் எனில் சிவகார்த்திகேயனுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி என்பதை மீண்டுமாக நிரூபித்திருக்கிறார். மரியாவை விரட்டிவிரட்டி காதலிக்கும் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை 100 % திருப்தி செய்திருக்கிறார். அவரது காதலியாக வரும் மரியா, சோனியா அகர்வாலின் சகோதரிபோல் தெரிகிறார். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகிற காட்சிகள், பொறுமையை சோதிக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சத்யராஜ், உடன் நடிக்கும் அத்தனை பேரையும் தன் திறமையான நடிப்பால் ஓரம்கட்டிவிடுகிறார். கதாபாத்திரமாகவே மாறிவிடும் சத்யராஜுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பிரேம்ஜி அமரன், பஞ்சு சுப்பு ஆகிய இரண்டு பேரும் வில்லன் முகம் காட்டி இருக்கின்றனர். தமன் இசையில் பாடல்கள் அனைத்துமே அதிரிபுதிரி தான். இதனிடையில் மனோஜ் பரமஹம்சாவின் கேமரா கோணங்கள் காட்சிகளுக்கு கனம்சேர்க்கிறது. டைரக்டர் அனுதீப்கே.வி. விறுவிறுப்பாக கதை கூற முயன்றிருக்கிறார்.

Categories

Tech |