Categories
சினிமா தமிழ் சினிமா

‘காதலே காதலே’ பின்னணி பாடலுடன் பிக்பாஸுக்குள் வந்த ரியோ மனைவி… வெளியான செகண்ட் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் ரம்யாவின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்திருந்தார் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் அனைவரும் பிரீஸ் ஆகி நிற்க ‘காதலே காதலே’ பின்னணி பாடலுடன் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார் .

இருவரும் கண்கலங்கி கட்டி அணைத்துக் கொள்கின்றனர் . இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுடன் உரையாடி கொண்டிருக்கையில் ‘நண்பர்களின் கடுப்பு என்று கூறி நீ பாட்டுக்கு ரம்யாவை தூக்கியது தான் நண்பர்களின் கடுப்பு’ என ஸ்ருதி கூற ‘இது நண்பர்களின் கடுப்பு மாதிரி தெரியலையே’ என நக்கலாக கூறுகிறார் ரியோ. இருப்பினும் ரியோவின் குழந்தை ரித்தி பிக்பாஸ் வீட்டிற்கு வராமல் இருப்பது போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் சற்று ஏமாற்றமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |