Categories
தேசிய செய்திகள்

காதலை ஏற்க மறுத்ததால்…. காதலன் செய்த வேலை…. நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்…!!

உத்திரபிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணுக்கு நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் கோவிந்த். இவர் அதே பகுதியை சேர்ந்த யாமினி (19 வயது) என்ற பெண்ணை  ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்த் தனது காதலை வெளிப்படுத்திய போது யாமினி ஏற்க மறுத்துள்ளார். இதனால் சம்பவத்தன்று நள்ளிரவு அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற கோவிந்த் அரிவாளை எடுத்து யாமினி, அவரது தாயார் மற்றும் அவரின் அண்ணியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து 3பெண்களின் அலறல் சத்தம் கேட்ட  அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது யாமினியும் அவரது தாயாரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் யாமினியின் அண்ணியை உயிருக்கு ஆபத்தான நிலையில்  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள கோவிந்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்ப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |