Categories
தேசிய செய்திகள்

காதலை ஏற்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி…. பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்…. உச்சகட்ட பரபரப்பு…..!!!!

ஜார்கண்ட் மாநிலம் துங்கா என்ற மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி அங்கீதா குமாரி என்பவரை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை ஏற்கஅந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருந்தாலும் சிகிச்சை பலன் இன்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாருக் என்ற நபரை இந்த வழக்கில் கைது செய்துள்ளதாகவும் விரைவில் விசாரணை நடத்துவதாகவும் நீதிமன்ற வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |