Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதலை ஏற்க முடியாது… மறுத்த சிறுமியை குத்திவிட்டு… தற்கொலை செய்த இளைஞர்..!!

காதலை ஏற்க மறுத்ததால் 17 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர், மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள சோ.நம்மியந்தல் என்ற கிராமத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் தான் பிரசாந்த்.. இவருக்கு வயது 19.. இவர் இதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அனிதா என்ற சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் பிரசாந்த் வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அனிதா முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் சிறுமியை இரும்புக் கம்பியால் கை, தலை உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக குத்தியுள்ளான்.

பின்னர் சம்பவ இடத்திலிருந்து உடனே தப்பியோடிய அவன், மின்கம்பத்தின் மீது ஏறி மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அதிர்ச்சியடைந்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.. இதற்கிடையே, இளைஞரால் சரமாரியாக தாக்குதலுக்குள்ளான சிறுமியை, அவரது உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தபகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |