Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலை கண்டித்த பெற்றோர்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகளான காவியா ஸ்ரீ என்பவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காவியாவும், ஒரு வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த காவியாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த காவியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவியாவின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |