உலகம் முழுவதிலும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை காதல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சாக்லேட் டே, ப்ராமிஸ் டே, கிஸ் டே, ஹக் டே என காதல் வாரம் கொண்டாடுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் காதல் எதிர்ப்பு வாரம் கேள்விப்பட்டுள்ளீர்களா? ஆம் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 21ஆம் தேதி வரை காதல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காதலில் தோல்வியடைந்தவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக ஸ்லாப் டே தொடங்கி பிரேக் அப் டே வரை இதில் அனுசரிக்கப்படுகிறது. இதில் காதலால் தோல்வி அடைந்தவர்கள் அனைவரும் தங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொள்ளலாம். இந்த ஒரு வாரம் உங்களுக்கான வாரம். உங்கள் மனதில் உள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.