Categories
தேசிய செய்திகள்

காதல் கணவனால் கைவிடப்பட்டு… ஐஸ்கிரீம் விற்ற ஊருக்கே… கெத்தா போலீஸ் அதிகாரியாக வந்த இளம்பெண்….!!!!

காதல் கணவன் கைவிட்ட போதும் சாலையில் ஐஸ்கிரீம் விற்று தனது 6 மாத குழந்தையை வளர்த்து போலீஸ் அதிகாரியாக பணி அமர்ந்துள்ள ஒரு பெண்ணின் கதைதான் இது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாக கொண்ட ஆனிசிவா என்பவர் தனது முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பின் மீது வீட்டின் எதிர்ப்பையும் மீறி ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த காதல் திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. இரண்டு வருடம் காதல் கணவனுடன் இல்லற வாழ்க்கை நடத்திய அவர் பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 6 மாத கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அவருக்கு பெற்றோர் வீட்டிலும் இடம் கிடைக்கவில்லை.

இதனால் ஆதரவற்ற நிலையில் தனது பாட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்த அவர் மிகுந்த வைராக்கியத்துடன், தனது குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற மன உறுதியுடனும், வர்கலாவில் உணவு டெலிவரி செய்து, எலுமிச்சம் பழங்களை விற்று, திருவிழாக்களில் ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை விற்று கிடைத்த வேலைகளை பார்த்துக்கொண்டு கல்வியையும் விடாமல் தொடர்ந்து படித்து வந்துள்ளார்.பிறகு போலீஸ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஸ்கிரீம் விற்ற ஊரிலேயே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் “10 ஆண்டுகளுக்கு முன்பு வர்கல சிவகிரி யாத்திரைக்கு வரும் மக்களுக்கு எலுமிச்சபழங்களையும், ஐஸ்கிரீம் விற்றேன். நான் இன்று போலீசாக அதே இடத்திற்கு செல்கிறேன்” என்று கூறினார். கேரள காவல்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கு அவரது கதையை குறிப்பிட்டு இது ஒரு போராட்டத்தின் கதை. சவால்களை உறுதியுடன் வென்ற எங்கள் சாகாவின் கதை என்று பெருமிதமாக தெரிவித்துள்ளனர். இவரை குறித்து சுகாதார அமைச்சர் வீணா சார்ஜ் தனது பேஸ்புக்கில் தனது “கணவரும் பெற்றோரும் வீதியில் விட்டபோது, வாழ்க்கையில் சவால்களை எதிர்த்துப் போராடியது மட்டுமல்லாமல் ஒரு குழந்தையை வளர்த்துள்ளார். உலகமெங்கும் உள்ள பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |