விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீரியலில் ஜோடியாக நடித்த செந்தில் ஸ்ரீஜா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகிவிட்டனர்.
இந்நிலையில் நடிகர் செந்தில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கேரளாவில் உள்ள தனது மனைவி ஸ்ரீஜாவின் வீட்டில் வைத்து கொண்டாடியுள்ளார். மேலும் ஸ்ரீஜா தனது காதல் கணவருக்கு பேப்பர் கப்பலில் பூக்களை வைத்து பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.