Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காதல் கணவருடன் 5 வருட வாழ்க்கை…. ஏற்பட்ட கருத்து வேறுபாடு… பெண் எடுத்த முடிவு…!!

திருமணமான 5 வருடத்திற்குள் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொழிச்சலூர் பகுதியிலுள்ள பிரேம் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் விக்னேஷ் (29). இவருக்கு திவ்யா என்ற மனைவியும், ஆர்யா என்ற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவரும் கோடம்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.கடந்த சில தினங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் அடிக்கடி  சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற விக்னேஷ், சிறிது நேரத்தில் திவ்யாவுடன் போனில் பேசியுள்ளார்.

அப்போது  இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மன விரக்தி அடைந்த நிலையிலிருந்த திவ்யா தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இந்நிலையில் நேற்று காலை குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. இதில் சந்தேகமடைந்த விக்னேஷின்  தாயார் அறையில் சென்று பார்த்தபோது திவ்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |