சினிமாவில் உள்ள பிரபல நடிகை, நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பிறகு சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துவிட்டு மனக்கசப்பால் பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு ஏதோ சில காரணங்களால் பிரிந்த ஜோடிகளை பற்றி பார்க்கலாம்.
பார்த்திபன், சீதா :-
“புதிய பாதை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்த்திபன், சீதா ஆகிய இருவரும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இரண்டு பெண் குழந்தைகள் ஆகிவிட்ட நிலையில் மனக்கசப்பால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பிரதாப் போத்தன், ராதிகா :-
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன், ராதிகா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரே ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ராமராஜன், நளினி :-
“கரகாட்டக்காரன்” என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ராமராஜன், நடிகை நளினியை காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் அருண், அருணா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் இருவரும் ஏதோ சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்
பிரகாஷ் ராஜ், லலிதா குமாரி :-
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ், நடிகை லலிதா குமாரியை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் ஏதோ சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ரகுவரன், ரோகினி :-
தமிழ் சினிமாவில் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகர் ரகுவரன், நடிகை ரோகினி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஆனால் இருவரும் திருமணமான 8 வாரங்களுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சுரேஷ் மேனன், ரேவதி :-
நடிகரும், இயக்குனருமான சுரேஷ் மேனன், நடிகை ரேவதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் திருமணமாகி 27 வருடங்களுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
செல்வராகவன், சோனியா அகர்வால்:-
இயக்குனர் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சோனியா அகர்வால் குடிக்கு அடிமையானதால் செல்வராகவன் அவரை பிரிந்தார்.
ஏ.எல்.விஜய், அமலாபால் :-
“தெய்வத்திருமகள்” படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் என்பவரும், நடிகை அமலாபாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் நாளடைவில் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நாக சைத்தன்யா, சமந்தா :-
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஏதோ சில காரணங்களால் திருமணமான நான்கு வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தனுஷ், ஐஸ்வர்யா :-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர்.