Categories
தேசிய செய்திகள்

காதல் சின்னத்திற்கு இந்த நிலைமையா….? தாஜ்மஹாலுக்கு 1.5 லட்சம் அபராதம்…. எதற்கு தெரியுமா….? வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

தாஜ்மஹாலுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

டெல்லியில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்  வருவது வழக்கம். இந்நிலையில் இந்த  ஆண்டு  தாஜ்மாஹலுக்கு வீட்டு வரி செலுத்தாத காரணத்திற்காக 88 ஆயிரத்து 784 ரூபாயும்,  அபராத தொகையும் சேர்த்து 1  லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை  உடனடியாக செலுத்த வேண்டும் என ஆக்ரா நகராட்சி நிர்வாகம் இந்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது, “வீட்டு வரி வசூலிக்கும்  உரிமையை சாய் கட்டுமான நிறுவனத்திற்கு நகராட்சி வழங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் செயற்கைக்கோள் படங்கள் மேப்பிங்  மூலம் தனியார் நிறுவனம் தவறுதலாக வீட்டு வரி ரசீது அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது. மேலும்  இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் ஒற்றை  அனுப்பியுள்ளோம்” என கூறியுள்ளனர்.

Categories

Tech |