Categories
மாநில செய்திகள்

“காதல் ஜோடியின் களவாணித்தனம்” ஜாலியா வாழ இப்படியா பண்ணனும்…. வெளிவந்த பரபரப்பு உண்மைகள்…..!!!!

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடும் சம்பவங்களானது அதிகரித்தது. இந்த நிலையில் காவல்துறையினர் அங்கு சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வந்தனர். இதையடுத்து அதில் சிக்கிய நபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி காதல் ஜோடியை கைதுசெய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், காதல்ஜோடியான ஆவடியை சேர்ந்த ஜெய ஸ்ரீ (21), திருவொற்றியூரைச் சேர்ந்த பார்த்திபன் (23) ஆகிய இரண்டு பேரும் பயணிகளிடமிருந்து செல்போனை திருடி, அதை விற்று ஜாலியாக ஊர்சுற்றி சொகுசாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதன்பின் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

Categories

Tech |