கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் சிக்கந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஓட்டுனரான சேக் முகமது(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சேக் முகமது அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான லட்சுமணன், நவீன் ஆகிய இருவரும் சேக் முகமது உடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினர்.
இதனால் படுகாயமடைந்த சேக் முகமது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காதல் தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லட்சுமணன் மற்றும் நவீன் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.