Categories
உலக செய்திகள்

காதல் தம்பதிகளை… விருந்துக்கு அழைத்து துன்புறுத்திய … கொடூர சம்பவம்…!!

தம்பதிகள் இருவர் காதல் திருமணம் செய்துகொண்டதால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

துருக்கியிலுள்ள கமான் என்ற மாவட்டத்தில் இருக்கும் பேயரமோசு என்ற கிராமத்தை சேர்ந்த பெண் Vilton Ince (24). இப்பெண்ணின் குடும்பத்தினர் இவரிடம் உறவினர் ஒருவரை கட்டாயத் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இதில் விருப்பம் இல்லாமல் இருந்த Vilton காதலர் Osman celik என்பவருடன் மாயமாகியுள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தம்பதிகள் தங்களின் சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். இதனை அறிந்த Vilton Ince குடும்பத்தினர் அவர்களை ஏற்றுக் கொள்வதாக கூறி இரண்டு பேரையும் விருந்துக்காக அழைத்துள்ளனர்.

இதனை நம்பிய இருவரும் Vilton Ince வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு Vilton Ince குடும்பத்தினர் Vilton யை கழிவறையில் வைத்து கத்தியால் தாக்கி கொடூரமாக கொலைசெய்துள்ளனர். மேலும் அவரின் காதலர் Osmanயை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். மேலும் இருவரின் உடல்களை கிராமத்திற்கு வெளியில் கொண்டு சென்று புதைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து Osman யை காணவில்லை என்ற அவரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் Vilton Ince குடும்பத்தை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் தான் அவர்கள் செய்த கொடூர கொலைகள் வெளியில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |