Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாணிக்குளம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகள் திவ்யா(20) அரசு கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற திவ்யா வீட்டிற்கு திரும்பிய வராததால் சரவணன் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் அஜித்குமார்(22) என்பவர் திவ்யாவை காதல் திருமணம் செய்தது தெரியவந்தது. அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது திவ்யா தனது கணவருடன் செல்வதாக கூறினார். இருவரும் திருமண வயதை எட்டியதால் போலீசார் உங்கள் விருப்பப்படி வாழுங்கள் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ராஜகுமாரி நேற்று திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு சென்று தனது மகளை தன்னோடு அனுப்பி வைக்குமாறு கூறினார். அப்போது திவ்யா காணாமல் போனது, காதல் திருமணம் செய்தது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தியதால் அங்கு சென்று முறையிடுமாறு போலீசார் கூறியுள்ளனர். இதனால் ராஜகுமாரி தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். மேலும் ராஜகுமாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |