Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த இடத்தில்… இரு தரப்பினரும் மோதல்… சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த இடத்தில் இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஏ.கே மேட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்திக். ஊத்தங்கரை அடுத்துள்ள சந்தகொட்டாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியவாணி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கிடையில் சத்தியவாணியை கார்த்திக் கடத்தி சென்றுள்ளார் என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பின் காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து சமரசம் பேசி திருமணத்தை பதிவு செய்ய முடிவு செய்தார்கள். அதற்காக ஊத்தங்கரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு இருவீட்டாரும் நேற்று முன்தினம் வந்துள்ளனர். அப்போது சாட்சி கையெழுத்து போட கார்த்திக் மாமனாரை அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மறுத்ததால் ஆத்திரத்தில் கார்த்திக் மாமனாரை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் மோதிக் கொண்டார்கள்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள், உறவினர்கள் இருதரப்பினரையும் சமாதானபடுத்தினர். அதன்பின்  திருமணத்தை பதிவு செய்து விட்டு காதல் ஜோடிகள் சந்தோஷமாக வீடு திரும்பினார்கள். இந்த சம்பவம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |