Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” இளைஞன் கொலை…. மாமனார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு….!!

தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞரை, அவரின் மாமனாரே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரியின் ஒட்டர் திண்ணை என்ற கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.அவர் பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் செய்து கொண்டு மறுநாள் ஊருக்கு வந்த போது, ராஜேஸ்வரியின் பெற்றோர் பஞ்சாயத்தைக் கூட்டி இருக்கின்றனர்.பஞ்சாயத்தில் தனது மகளுக்கு முறைப்படி தங்களே திருமணம் செய்து வைப்பதாக கூறி ராஜேஸ்வரியை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் மூன்று மாதங்களிலும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி இருக்கின்றனர். அதன் பின்னர் கொரோனாவை காரணம் கூறி திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர். இந்நிலையில் விஜய்யும் வருமானம் இல்லாமல் இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் தன்னுடைய மனைவியை அனுப்ப வேண்டும் என ராஜேஸ்வரியின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ராஜேஸ்வரியின் பெற்றோர் அதற்கு மறுப்பு கூறிவிட்டனர். இதனைத்தொடர்ந்து ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் என்பவர் கடந்த 1 ஆம் தேதி அன்று தனக்கு உரிமையான மாங்காய் மண்டிக்கு விஜய்யை வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

மாமனாரை பார்ப்பதற்காக சென்ற விஜய் கும்மனூர் என்ற பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயின் மாமனார் மற்றும் அவரது உறவினர்கள் 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். விசாரணையின்போது, மாமனார் மற்றும் உறவினர்களே மருமகனை தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொன்று விட்டு விபத்து நடந்ததை போல நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சரக்கு வாகனத்தில் உடலை மறைத்து அதன் மீது தக்காளி பெட்டிகளை அடுக்கி சென்று சடலத்தை வீசி இருக்கின்றனர்.

அதேசமயத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து முனிராஜ் உள்ளிட்ட ஆறு நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |