தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெய கல்ராணி. இவர் நேற்று சதீஷ் குமார் என்பவரை பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கும் தனது கணவர் சதீஷ்க்கும் தந்தை சேகர்பாபு வால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் அவர்களிடம் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் தமிழகத்தில் எங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எனது தந்தை அமைச்சர் என்பதால் எங்களை அல்லது காதலனை கொலை செய்து விடுவார்கள் என அச்சம் உள்ளது. அதனால் கர்நாடக மாநிலத்தின் உதவியை நாடி வந்துள்ளோம் என்று அவர் கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.