வாணியம்பாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்டதால் கட்டப் பஞ்சாயத்தில் இரண்டரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் காதல் திருமணங்களே அதிக அளவு நடக்கின்றன. அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் வாணியம்பாடி அருகே புல்லூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் மற்றும் ஜெயப்பிரியா ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டது.
அப்போது அந்த பஞ்சாயத்தில் தம்பதிக்கு 2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபராதத்தை செலுத்தாததால் காதல் ஜோடி ஊரை விட்டு துரத்திய அதிமுகவினர் உள்ளிட்ட பஞ்சாயத்தார் பெண்ணின் தந்தையை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.