Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை”…. போலீசார் விசாரணை….!!!!!

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அருகே இருக்கும் ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்த செல்லப்பெருமாள் மற்றும் கஸ்தூரி சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த நிலையில் செல்ல பெருமாளுக்கும் கஸ்தூரிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கஸ்தூரி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்.

Categories

Tech |