விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமணியாத்தூர் கிராமத்தை சேர்ந்த யுவராஜ்-ம் அப்பகுதியை சேர்ந்த பானுப்பிரியா-வும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவரது வீடுகளில் சம்மதிக்காததால் காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பானுப்பிரியாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பானுப்பிரியாவை அங்கிருந்து அழைத்துச் சென்று பெற்றோர்கள் குடும்ப கௌரவத்தை கெடுத்து விட்டாயே என்று கூறி கோவிலில் வைத்து மொட்டை அடித்துள்ளனர். இதையடுத்து தன் மனைவியை கடத்திச் சென்று மொட்டை அடித்து விட்டதாக பெண்ணின் பெற்றோர் மீதும், உறவினர்கள் மீதும், காதல் கணவன் யுவராஜ் புகார் கொடுத்த நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்பின்னர், பானுபிரியாவை அவருடைய காதல் கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.