Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தற்கொலை…. நடந்தது என்ன?….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கேரளா மாநிலம் பாலக்காடு கண்ணூர் அருகில் உள்ள கறிவெள்ளூர் பகுதியில் ராகேஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சூர்யா(24). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது மேலும் ராகேஷ் தன்னுடைய மனைவி சூர்யாவை வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ராகேஷின் தாய் சந்திராவும் உடந்தையாக இருந்து வந்துள்ளார். இது குறித்து அவ்வப்போது தனது பெற்றோர்களுக்கு சூர்யா செல்போன் மூலம் கணவன் மற்றும் மாமியார் கொடுமைகள் குறித்து அழுது கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சூரியா தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை கொடுமைப்படுத்தியதோடு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மற்றும் மாமியார் சந்திரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |