இளம்பெண் ஒருவர் ஆண் என்று நினைத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள ஜாம்போ பகுதியில் 22 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு டேட்டிங் ஆப் மூலமாக ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இளம் பெண்ணிடம் அந்த நபர் தான் ஒரு தொழிலதிபர் என்று கூறியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு பிறகு இளம் பெண்ணிடம் இருந்து அந்த நபர் அடிக்கடி பணம் வாங்கவே இளம் பெண்ணின் பெற்றோருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய மனைவியை யாரிடமும் பேச விடாமல் அடைத்து வைத்துள்ளார். இதன் காரணமாக இளம் பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை அந்த நபரிடம் இருந்து மீட்டனர். அதன்பின் இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது இளம்பெண் தான் திருமணம் செய்து கொண்ட நபர் ஆண் இல்லை என்றும், அவர் ஒரு பெண் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் இளம் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் போது இளம்பெண்ணின் கண்ணை கட்டி விட்டு அனைத்து விளக்குகளையும் அனைத்து விடுவார் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.