Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மினிலாரி வைத்துள்ளார். இவருக்கு ஜோதிகா(21) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிகாவும் திருப்பதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |