கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுதொண்டமாதேவி பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நிவேதாவும் அதே ஊரில் வசிக்கும் பாலாஜி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இது நந்தகோபாலின் தம்பி செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் புதுமண தம்பதியினர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி, மகள் நர்மதா, மகன் வசந்தகுமார் ஆகிய 3 பேரும் இணைந்து நிவேதா மற்றும் பாலாஜியை ஆபாசமாக திட்டி சொத்துக்களை தங்களது பெயரில் மாற்றி எழுதி தருமாறு கேட்டுள்ளனர். பின்னர் சொத்துக்களை எழுதி தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து நந்தகோபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தனலட்சுமி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்