Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த மகன்…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

முதியவரை வெட்டி கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் வீராசாமி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் ஆனந்தராஜ்(32) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் முருகேசன்(30) கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு உறவினரான மதியழகன் என்பவரது மகள் லாவண்யாவை முருகேசன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக வீராசாமி குடும்பத்தினருக்கும், மதியழகனின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து புதுமண தம்பதியினர் பட்டுக்கோட்டைக்கு சென்றுள்ளனர்.

இதனை அறிந்த மதியழகனும், அவரது அண்ணன் மகன் மூர்த்தியும் இணைந்து இரவு நேரத்தில் வீராசாமியிடம் தகராறு செய்துள்ளனர். இதில் கோபமடைந்த இருவரும் முதியவரின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுக்காயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கினை விசாரித்த பட்டுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் மதியழகன், மூர்த்தி ஆகிய இருவருக்கும் ததலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |