Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதல் திருமணம் செய்த மகள்…. கணவனின் கொடூரச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

கொடூரமான முறையில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு அருகே கடப்பந்தாங்கள் கிராமத்தில் சசிதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சினேகா கீழம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சினேகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் சினேகா வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த விக்னேஸ்வரனுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக சினேகாவின் குடும்பத்திற்கும், விக்னேஸ்வரனின் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கு பழி வாங்குவதற்காக விக்னேஸ்வரன், இவருடைய அண்ணன் பசுபதி மற்றும் பெரியப்பா சௌந்தர்ராஜன் உள்ளிட்ட சிலர் சசிதரனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து கடந்த 7-ஆம் தேதி ஆற்காடு டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணி, விக்னேஷ்வரன், பசுபதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வந்துள்ளனர். இதில் நேற்று சவுந்தரராஜன் மற்றும் லோகேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |