Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. 4 மாதங்களில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 4 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் மாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு மாலினியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த மாலினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாலினியின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக மாலினியின் தந்தை முனுசாமி தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |