வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் வெல்டிங் தொழிலாளியான எடிசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேர்மக்கனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் எடிசன் அதே பகுதியில் வசிக்கும் சிலருடன் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சிலர் எடிசனை தாக்கியுள்ளனர். இதனால் சேர்மக்கனி தனது கணவரை வீட்டிற்கு அழைத்து சென்று அறையில் வைத்து பூட்டியுள்ளார். அப்போது எடிசன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேர்மக்கனி அலறி சத்தம் போட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று எடிசனை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி எடிசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சேர்மக்கனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவதூறாக பேசி எடிசனை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் மார்லின் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.