ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானூர் காலனியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி வள்ளி. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜெகதீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது கணவர் வீட்டில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓமலூர் போலீஸ் நிலையத்தில் அவரது தாயார் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் “எனது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 50,000, 2 பவுன் தங்கச் சங்கிலி கேட்டு அவற்றை வாங்கி வருமாறு மகளிடம் வரதட்சனை கேட்டு ஜெகதீஸ் தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதன் காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் அடித்தார். அந்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட நான்கு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.