காதல் திருமணம் செய்த மூன்று மாதத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார் ஸ்டெல்லா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஸ்டெல்லா மிகுந்த தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் நேற்று தனது கணவன் வெங்கடேஷிடம் நன்றாக பேசி விட்டு அறைக்கு சென்ற ஸ்டெல்லா ஒரு மணி நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் வெங்கடேஷ் படுக்கை அறையின் கதவை தட்ட உள்ளே எந்த சத்தமும் இல்லை. இதனால் சந்தேகம் கொண்டு கதவை உடைத்து போது ஸ்டைலா மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்த அவர்கள் ஸ்டெல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டெல்லா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.