Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை…. வாலிபருக்கு வலைவீச்சு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தலைமறைவாக உள்ள வாலிபரை தனிப்படை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே இலங்கன்விளை பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவரை ரஞ்சித் என்ற வாலிபர் காதலிப்பதாக கூறி, திவ்யாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக திவ்யா தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார். அப்போது செர்லின் புரூஸ் என்ற வாலிபருக்கும், திவ்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரஞ்சித் திவ்யாவுக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீட்டிற்கு வந்த திவ்யாவுக்கு செர்லின் புருஸ் செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் மனமுடைந்த திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி ரஞ்சித் மற்றும் செர்லின் புருஸ் ஆகிய 2 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செர்லின் புருஸை கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியாளன ரஞ்சித் கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததால், தனிப்படை காவல்துறையினர் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.

Categories

Tech |