‘காதல்’ படத்தில் நடித்திருந்த பரத் மற்றும் சந்தியா இருவரும் 16 வருடங்களுக்குப் பின் சந்தித்து எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள் எக்கச்சக்கமாக வெளியாகி இருந்தாலும் ரசிகர்களால் இன்றுவரை மறக்க முடியாத திரைப்படம் ‘காதல்’. 2004 ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா நடித்திருந்தனர் . இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வசூலை வாரி குவித்தது .
முக்கியமாக இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது . இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் நடித்திருந்த பரத் மற்றும் சந்தியா இருவரும் 16 வருடங்களுக்குப் பின் சந்தித்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.