Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது தான் காரணமா..? காதல் மனைவியின் கண்முன்னே… கணவன் செய்த கொடூரம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் லாரி டிரைவர் காதல் மனைவியின் கண் முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீலப்பாடி கே.ஆர்.நகர் பூங்கோடையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திரிபுரஜோதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிபுரஜோதியை, தனது அம்மாவுடன் கோவிலுக்கு செல்ல அழைத்தார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் செல்வராஜ் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திரிபுரஜோதியின் கண்ணெதிரே செல்வராஜ் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தீப்பற்றி எரிந்ததில் செல்வராஜ் வேதனை தாங்க முடியாமல் வீதியில் ஓடியுள்ளார். அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர் மீது எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இதையடுத்து செல்வராஜ் உடல் கருகி உயிருக்கு போராடிய நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன்பின் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |