Categories
சென்னை மாநில செய்திகள்

காதல் மனைவியை அருவிக்கு அழைத்து சென்று…. குத்தி கொன்ற கொடூர கணவன்…. பகீர் சம்பவம்….!!!!

சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதிநகர் எட்டாவது தெருவை சேர்ந்த மதன் (19) தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி தமிழ்ச்செல்வி திடீரென மாயமானார். பின்னர் புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றதை அறிந்து மதன் தமிழ்ச்செல்வியை கொலை செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் அருவிக்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மதனும் தமிழ்ச்செல்வியும் வனப்பகுதிக்குள் செல்வதும், மதன் மட்டும் திரும்பி வந்ததும் பதிவாகி இருந்தது. அதனைப் பார்த்து மதனிடம் விசாரணை நடத்திய போது, அருவியில் வைத்து தமிழ்செல்வியை கத்தியால் குத்தி விட்டு மதன் தப்பி சென்றது தெரியவந்தது. அதன் பிறகு போலீசார் தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றினர். காதல் மனைவியை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |