Categories
தேசிய செய்திகள்

காதல் மனைவியை கொன்று 50 துண்டுகளாக கூறுபோட்ட கொடூரன்…. பின்னணி என்ன?…. மனதை பதைபதைக்கும் சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இளம் பெண்ணை கொலை செய்து 50 துண்டுகளாக வெட்டிய கணவரின் கொடூர செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சாகிப்கஞ்ச் மாவட்டத்தின் போரியோ காவல் நிலைய எல்லையில் ரூபிகா பகதின் (22) என்பவர் வசித்து வந்தார். பழங்குடி இனத்தை சேர்ந்த இந்த இளம் பெண் தில்தார் அன்சாரி(28) என்பவரை காதலித்து உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 2 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையில் தில்தார் அன்சாரிக்கு, ரூபிகா 2வது மனைவி.

இந்நிலையில் தன் மனைவி மாயமானதாக தில்தார் அன்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சந்தாலி எனும் கிராமத்தில் கட்டப்பட்டுவரும் ஒரு அங்கன்வாடி மைய கட்டிடத்தில் ஒரு பெண்ணின் கால் மற்றும் உடலின் சில பாகங்கள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குகிடந்த 12 உடல் பாகங்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் அந்த உடல் பாகங்கள் இளம்பெண் ரூபிகாவுடையது என தெரியவந்தது. அதனை தொடர்ந்து தில்தார் அன்சாரியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, மனைவியை கொலை செய்து 50-க்கு மேற்பட்ட துண்டுகளாக கூறுபோட்டு வீசியதாக அவர் தெரிவித்தார். மேலும் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக புகார் கொடுத்ததையும் தில்தார் அன்சாரி ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக டெல்லியில் இளம்பெண்ணை கொன்று 35 துண்டுகளாக கூறுபோட்ட சம்பவத்தின் பரபரப்பு தணிவதற்குள், ஜார்கண்டிலும் இதைப்போன்று ஒரு சம்பவம் நடந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |