தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கன்னித்தாய் (30). கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அலி பாத்திமா (4), கஜிதா பிஸ்மி (3) என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இம்மானுவேல் அப்துல்லா நேற்று முன்தினம் அவரது மனைவியை அடித்து கொன்று விட்டு தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, “எனது மனைவியை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால் கடந்த சில நாட்களாக அவள் இரவு, பகல் என மணி கணக்கில் மற்றொரு நபருடன் பேசிக் கொண்டிருக்கிறார். இதனை நான் கண்டித்த போதும் கேட்காத அவள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனால் நான் ஆத்திரம் அடைந்து அவளை கம்மால் அடித்து கொலை செய்தேன்” என கூறியுள்ளார். இதனைதொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.