Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் வேலூர்

“காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்ற கணவன்”…. கைது செய்த போலீஸார்…!!!!!

காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்துள்ள தேவாலபுரம் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரும் வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டை அடுத்திருக்கும் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ஷூ கம்பெனியில் வேலை செய்தபொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சென்ற ஒன்பது வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இத்தம்பதியினருக்கு இரண்டு மாதங்கள் இருக்கின்ற நிலையில் நேற்று முன்தினம் இருவரும் குழந்தைகளுடன் தேவாலபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்திருக்கின்றனர். அப்போது கணவன்-மனைவி இடையே திடீரென சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்களை குடும்பத்தினர்கள் சமாதானம் செய்து வைத்ததை தொடர்ந்து நேற்று காலையில் குடும்பத்தினர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கின்றனர். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விக்னேஷ் ஆத்திரமடைந்து நந்தினி அணிந்திருந்த துப்பட்டாவை பறித்து அவரின் கழுத்தை நெருக்கி உள்ளார்.

இதனால் நந்தினி பரிதாபமாக விழுந்து விட்டார். இதையடுத்து கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது நந்தினி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து விக்னேஷை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். பின் காயமடைந்த விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். நந்தினியின் தந்தை செல்வராஜ் விக்னேஷ் மீது புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள்.

Categories

Tech |