நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றது. 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் மிகவும் திணறி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்துவரும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக மத்திய அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனக்குரிய ஸ்டைலில் பாட்டு வடிவில் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள் : ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
என் பாட்டு வரியை மாற்றி
எனக்கே அனுப்புகிறார்கள் :'காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’#PetrolDieselPriceHike— வைரமுத்து (@Vairamuthu) February 17, 2021