Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் வலையில் வீழ்ந்த 2 மாணவிகள்…. “பல இடங்களில் வைத்து பலாத்காரம்”… டிமிக்கி கொடுத்த டியூசன் ஆசிரியரை தூக்கிய போலீஸ்… நடந்தது என்ன?

இரண்டு மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி தெடாவூர் பகுதியில் வசித்து வந்த மணிமாறன்(40) என்பவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் ஒழுங்கின நடவடிக்கையின் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் ஏ டூ இசட் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி அதில் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வந்துள்ளார்.

இது குறித்து சேலம் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் கடந்த 2019ஆம் ஆண்டு தலைமறைவாகி போலீஸ் கண்ணில் சிக்காமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணித மற்றும் நடன ஆசிரியராக கடந்த 2020 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். அப்போது அவர் அந்தப் பகுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளார்.

இதையடுத்து மணிமாறனுக்கு அந்தப் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியின் பெற்றோருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அந்த சிறுமி 11-ம் வகுப்பு படிப்பதால் தனது மகளுக்கு கணித பாடம் எடுக்கும்படி மணிமாறனிடம் அந்த சிறுமியின் பெற்றோர்கள் கூறினார். உடனே மணிமாறன் அந்த மாணவி உட்பட சிலபேருக்கு டியூசன் நடத்தி வந்துள்ளார். அப்போது டியூசனுக்கு வந்த 16 வயது மாணவியிடம் தனது மன்மத சேட்டையை ஆரம்பித்து, காதல் மொழியில் பேசி, அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வலையில் விழ வைத்தார்.

அதன்பின் மாணவியிடம் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அந்த மாணவி அறியாத பருவத்தில் இருந்ததால் மணிமாறன் சொல்வதை கேட்டு அவருடன் சென்று விட்டார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் மணிமாறன் மீது வழக்குப் பதிந்து வலைவீசி தேடி வந்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் மணி மாறனை கைது செய்ய 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதன்பின்னர் மணிமாறன் பாண்டிச்சேரி, சென்னை, கொடைக்கானல், பழனி, ராமநாதபுரம், திருச்சி,  உட்பட பல்வேறு இடங்களுக்கு மாணவியுடன் சுற்றி திரிந்து வந்துள்ளார். பின் அந்த மாணவியிடம் குமரி மாவட்டத்திற்கு சென்று பின் அதைத்தொடர்ந்து இருவரும் சுசீந்திரம் சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் புதிதாக திருமணம் செய்து கொண்டோம் என்று கூறி ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்‌. அந்த சிறுமி என்னுடைய அக்கா மகள் நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். ஆதலால் உறவினருக்கு பிடிக்காததால் தனியாக வந்து விட்டோம் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகள் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அந்த கல்லூரி மாணவியிடம் மணிமாறன் தனது காதல் வலையை வீச ஆரம்பித்தான். இதையடுத்து கல்லூரி மாணவி ஆரம்பத்தில் 16 வயது மாணவியுடன் பழகி வந்ததால் அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மணிமாறனின் காதல் வலையில் அந்த கல்லூரி மாணவி சிக்கிக்கொண்டார்.

பின் அந்த கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி  வீட்டை விட்டு வெளியே சென்று விடலாம் என்று மணிமாறன் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து வெளியூர் செல்வதற்கு பணம் தேவைப்படுவதால் வீட்டிலுள்ள நகை, பணம் அனைத்தையும் எடுத்து வரும்படி அந்த கல்லூரி மாணவியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த கல்லூரி மாணவி வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு மணிமாறனுடன் சென்றுவிட்டார். இதையடுத்து கல்லூரி மாணவி காணாமல் போனது தொடர்பாக அவரின் பெற்றோர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் இரண்டு மாணவிகளையும் கடத்தி சென்ற மணிமாறன் அவர்களை பல்வேறு இடங்களுக்கு கூட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோக்களை காண்பித்து, அதேபோன்று மாணவிகளை இருக்கும் படி கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். அப்போது காவல்துறையினர் மணிமாறனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது போட்டோவை நோட்டீஸ்ஸில் அச்சடித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்து பரப்பி வந்தனர்.

இந்நிலையில் மணிமாறன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பதாக சரவணம்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அருண் மேற்பார்வையில் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார்  திருப்பதிக்கு விரைந்து சென்று மாருதி நகரில் தங்கியிருந்த மணிமாறனை  மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும் இரண்டு மாணவிகளையும் மீட்ட போலீசார் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும், கவுன்சிலிங் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து மணிமாறனின் மீது கடத்தல், மிரட்டல், பாலியல் பலாத்காரம் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்  பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8 மாதங்களாக போலிசுக்கு  டிமிக்கி கொடுத்து வந்த டியூசன் ஆசிரியர் மணிமாறனை கைது செய்த தனி படையினரை  கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |